திருவாரூரில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவாரூரில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவாரூரில், தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சிகள் கண்டனம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த கலவரத்தின் போது பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடூரத்தை கண்டித்து திருவாரூரில் தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சோபா கணேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், பழங்குடியின மக்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை துன்புறுத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கலிய பெருமாள், நகர் மன்ற தலைவர்கள் புவனபிரியா செந்தில் (திருவாரூர்), பாத்திமா பசீரா (கூத்தாநல்லூர்), திருவாரூர் நகர சபை துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் டி.செந்தில், மாவட்ட மகளிரணி தலைவர் ராணி சேகர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், துணைத்தலைவர் அம்சவள்ளி, தொண்டரணி தலைவர் வசந்தி, துணை தலைவர் மரித்தீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.