திருவாரூரில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு


திருவாரூரில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு
x

கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தொடர்பாக திருவாரூரில் ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நேற்று(சனிக்கிழமை) மட்டும் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி 9 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அதில் ஒருவர் கஞ்சா விற்பனையாளர்.

கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story