திருமால்பாடி பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர் மார்பில் உரல் வைத்து மஞ்சள் ெபாடி இடிக்கும் நிகழ்ச்சி


திருமால்பாடி பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர் மார்பில் உரல் வைத்து மஞ்சள் ெபாடி இடிக்கும் நிகழ்ச்சி
x

திருமால்பாடி பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர் மார்பில் உரல் வைத்து மஞ்சள் ெபாடி இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருமால்பாடி பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர் மார்பில் உரல் வைத்து மஞ்சள் ெபாடி இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேசூரை அடுத்த திருமால்பாடி கிராமத்தில் குளக்கரை அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. இதனையொட்டி வள்ளி தெய்வானை முருகர் உற்சவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வைத்து சரவணன் ஜோதி சுரேஷ் பாஸ்கரன் சார்பில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, தங்க தாலி, 11 வகை வரிசை தட்டுகள் வைக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது மறுநாள் மூலவர் பழனி ஆண்டவர், உற்சவர் வள்ளி தெய்வானை க்கு பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர்திருவிழா கொடி ஏற்றப்பட்டு காப்பு கட்டப்பட்டது.

கண்டராமன்குளத்திலிருந்து பூக்கள், பூ கரகம் ஜோடித்துக் கொண்டு வந்து கோவிலில் வைத்தனர். மறுநாள்108 சுமங்கலி பெண்கள் பால் குடத்துடன் வீதி உலா வந்து பழனி ஆண்டவருக்கும் உற்சவர் வள்ளி முருகன், தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

நேற்று நேர்த்திக்கடனாக மிளகாய் இடித்து தூள் செய்து கரைத்து இரண்ட பக்தர்கள் மீது நேர்த்திக்கடனாக அபிஷேகம் செய்தனர்., மேலும் குழந்தை வரம் கேட்டு பெண்கள் பக்தர் மீது மார்பில் கல் உரலை வைத்து இதில் மஞ்சள் போட்டு குழந்தை வரம் கேட்கும் பெண்கள் உலக்கை கொண்டு இடித்தனர்.

அதன்பின் பழனி ஆண்டவர் பாதத்தில் மஞ்சள் வைத்து பூஜை நடந்தது. இதனையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

பம்பை. உடுக்கை. மேள கச்சேரியுடன் புஷ்ப பல்லக்கில் பழனியாண்டவர் வீதி உலா வந்த போது 21 அடியில் உயரம் பறந்து வந்து பக்தர் பழனி ஆண்டவருக்கு மாலை அணிவித்தார். 5 மணி அளவில்கோவில் முன்பு தீமிதி விழா நடந்தது. இடும்பன் சுவாமிக்கும் பூஜை நடந்தது. சிறப்பு

அழைப்பாளராகசெஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்மஸ்தான், கலந்து கொண்டார். ஏற்பாடுகளை திருமால்பாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.



Next Story