திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் சிக்கினர்


திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமருதூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சுப்பிரமணி மகன் தினேஷ்(வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் மேலத்தானூர், அம்மன் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேலத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா(60), வள்ளி(60), அம்மன் கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(62) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருக்கோவிலூர் ஏரிக்கரைமூலை பகுதியில் போலீசார் ரோந்து பணி சென்றபோது, அங்கு 2 பேர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கபூர்(74), அவரது மனைவி மும்தாஜ்(66) ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story