தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் மற்றும் நகை கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சமர்ப்பித்து பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆகலாம்.
சில்லரை விற்பனை மூலம் உரங்கள்
நகர கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் நகை கடன், மத்திய காலக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் மற்றும் நகை கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன் கடன் மனு சமர்ப்பித்து பயிர் கடன் மற்றும் இதர கடன்களை பெற்று பயனடையலாம். உறுப்பினர் மற்றும் உறுப்பினர் இல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்று கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் 7338749200, திருவாரூர் சரக துணைப்பதிவாளர் 9488489712, மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் 7338749203 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.