கம்பம் பகுதியில்லித்திய கனிமம் குறித்து புவியியல் மையத்தினர் ஆய்வு


கம்பம் பகுதியில்லித்திய கனிமம் குறித்து புவியியல் மையத்தினர் ஆய்வு
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் லித்திய கனிமம் குறித்து புவியியல் மையத்தினர் ஆய்வு செய்தனர்.

தேனி

இந்திய புவியியல் ஆய்வு மையம் மூலம் பூமிக்கு கீழ் உள்ள எக்கு, நிலக்கரி, லித்தியம், உலோகம் மற்றும் கனிமங்கள், மினரல் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் அறிக்கை தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி, 2023- 24-ம் ஆண்டிற்கான ஆய்வு பணிகள் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியும் இடம் பிடித்துள்ளது.

இதனால் இந்திய புவியியல் மையம் சார்பில், கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியில் 15 இடங்களில் பணி மேற்கொள்ள தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்திரங்கள் மூலம் நிலத்தை துளையிட்டு கனிமங்களை சேகரித்து இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கம்பத்தில் இதுவரை தனியார் மற்றும் அரசு நிலங்கள் உள்பட 4 இடங்களில் ஆய்வுகள் நடந்துள்ளது. மீதமுள்ள 11 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக பொறியியல் வல்லுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். தற்போது நடந்த ஆய்வில் லித்திய கனிமம் இருப்பது உறுதியானால் அடுத்த கட்ட ஆய்வு நடத்தப்படும் என்று மத்திய புவியியல் ஆய்வு மையத்தினர் கூறினர்.


Related Tags :
Next Story