கலெக்டர் அலுவலகத்தில்தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


கலெக்டர் அலுவலகத்தில்தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உயிர் நீத்த தியாகிகளுக்காக 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, துணை கலெக்டர் (பயிற்சி) பாசில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story