குமரி மாவட்டத்தில் மழை:முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை:முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை பெய்தது முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

திடீர் மழை

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறிகளுக்கு கீழ் படுத்து தூங்கினாலும் கடுமையான வெட்கையால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இவ்வாறு கடுமையான வெப்பத்துக்கு மத்தியிலும் குமரி மாவட்டத்தில் இடையிடையே லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையிலும் மழை பெய்தது.

முக்கடல் அணைப்பகுதி

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் அதிக பட்சமாக முக்கடல் அணைப்பகுதியில் 24.9 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு;-

பேச்சிப்பாறை அணை-9.4, பெருஞ்சாணி அணை-14.4, புத்தன் அணை-12.8, சிற்றார்-1 அணை-11, சிற்றார்-2 அணை-14.2, மாம்பழத்துறையாறு அணை-19.2, பூதப்பாண்டி- 20, கன்னிமார்- 9.2, சுருளக்கோடு-3.2, பாலமோர்-9.4, திற்பரப்பு-8 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 216 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 223 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 78 கன அடி தண்ணீர் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story