சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 25-ந்தேதி கடைசி நாள்
சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி தெரிவித்தார்
தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட கோர்ட்டு வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம்' என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.