குமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


குமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பூச்சாத்தான்குளத்தை சேர்ந் தவர் ஜெனித் (வயது 24), தொழிலாளி. இவர் மீது ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும், கோட்டார் போலீஸ் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளும் உள்ளன.

இவர் போலீஸ் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஜெனித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதற்கான அனுமதி கோரி கலெக்டர் பி.என்.ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு அவர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஜெனித்தை ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story