மே தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


மே தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
x

மே தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்று பொதுமக்கள் குறைகளை கேட்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவள்ளூர்

மே 1-ந்தேதியையொட்டி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. திருத்தணி அடுத்த கோரமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மராஜு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்து பொதுமக்களோடு கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட 13 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரமங்கலம் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லை. 100 நாள் வேலை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. அகூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை உள்பட பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்கள் முன் வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரிஷப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மலர்விழி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ஜவஹர்லால், திருத்தணி வருவாய் ஆர்.டிஓ., (பொ) ஜெயராஜ் பௌலின், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரூபேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story