கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி என் பி எஸ் சி குரூப்-2 2ஏ தேர்வை 17066 பேர் எழுதினார்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  டி என் பி எஸ் சி குரூப்-2 2ஏ தேர்வை 17066 பேர் எழுதினார்கள்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப்-2, 2ஏ தேர்வை 17 ஆயிரத்து 66 பேர் எழுதினார்கள்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

66 மையங்களில்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 66 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2,546 பேர் தேர்வு எழுதவில்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு நேற்று 66 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 612 பேர் விண்ணப்பித்தனர். இதில் 17 ஆயிரத்து 66 பேர் தேர்வு எழுதினார்கள். 2,546 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு, நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகளுடன் தேர்வு நடைபெற்றது.

5 பறக்கும்படைகள்

முறைகேடுகளை தடுக்க 5 பறக்கும்படைகள், 14 சுற்றுக்குழு அலுவலர்கள் 90 காவல்துறை அலுவலர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story