சோழவரம் ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தீர்மானம்
சோழவரம் ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
சோழவரம்,
சோழவரம் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தீர்மானங்களை உதவி அலுவலர் கண்ணன் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிக்குழு தலைவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு கவுன்சிலர் தொகுதி வளர்ச்சி பணிகளான தார் சாலை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, விளையாட்டு திடல், கிராம சுடுகாடு, சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க மேடை, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளுவதற்காக ரூ.2 கோடியே 51 லட்சத்து 4 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக மேலாளர் சுபதாஸ் நன்றி கூறினார்.