குலசேகரம் அருகே கால்வாயில் ஆண் பிணம் மீட்பு

குலசேகரம் அருகே கால்வாயில்   ஆண் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே பேச்சிப்பாறை இடது கரைகால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே பேச்சிப்பாறை இடது கரைகால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆண் பிணம்

பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோதையாறு இடதுகரை கால்வாயில் குலசேகரம் வழியாக பாய்கிறது. இந்த கால்வாயில் குலசேகரம் அருகே அரியாம்பகோடு பகுதியில் உள்ள மதகில் ஒரு ஆண் பிணம் மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர்.

விசாரணை

அப்போது, பிணமாக கிடந்தவருக்கு 60 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story