தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடக்கிறது
தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வேலூரில் கருத்தரங்கம் நடந்தது. சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில செயலாளர் டாக்டர் சுபேர்கான் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தணிக்கைக்குழு உறுப்பினர் முகமதுசகி, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் முன்னிலை வகித்து பேசினர். மாநில துணை செயலாளர் நூருல்லா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சிறுபான்மையின மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடக்கிறது என்றார்.
கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர்கள் அன்வர்கான், ஜோசப்ராஜ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகர மகளிரணி அமைப்பாளரும், மேயருமான சுஜாதா, பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரேசன், அன்புநிதி, பகுதி செயலாளர்கள் சுந்தரவிஜி, முருகப்பெருமாள், தங்கத்துரை, பாலமுரளி, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அசோகன், துரைசிங்காரம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.