தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்மேலும் 2 புதிய கிளைகள் திறப்பு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மேலும் 2 புதிய கிளைகள் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி. இந்த வங்கி பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதையடுத்து, தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி ஏற்கனவே 541 கிளைகளுடன் இயங்கி வந்தது. இந்த நிலையில் மேலும் 2 புதிய கிளைகள் திறக்கப்பட்டு உள்ளன.
வங்கியின் 542-வது கிளையை தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் வர்த்தக தொழில் சபை தலைவர் சின்னிகிருஷ்ணராவ் திறந்து வைத்தார். 543-வது கிளையை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஐக்கிய முஸ்லிம் பேரவை தலைவர் எம்.கே.முகைதீன் தம்பி என்ற துரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story