தமிழகத்தில் 'அனைத்து தொகுதியிலும் பா.ஜ.க. போட்டியிட்டால் மட்டுமே வளரும்' சுப்பிரமணியசாமி பேட்டி
வேறு மாநிலங்களில் உள்ளது போல், தமிழக பாரதீய ஜனதா கட்சி பணிகள் எதுவும் செய்வதில்லை.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வேறு மாநிலங்களில் உள்ளது போல், தமிழக பாரதீய ஜனதா கட்சி பணிகள் எதுவும் செய்வதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்யக்கூடாது. பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும். பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் முடிவாகவில்லை. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சேர்ந்தால் இருக்கிற வாய்ப்பும் காங்கிரசின் ராகுல்காந்திக்கு இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story