சிவகாசியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை
பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஞ்சா விற்பனை
வெளிமாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு கஞ்சா பெரும் அளவில் வினியோகம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியில் உள்ள ஊர்களில் போலீசாரின் ரோந்து பணி குறைவாக இருப்பதால் கஞ்சா அதிக அளவில் விருதுநகர் மாவட்டத்துக்கு வினிேயாகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தையொட்டி உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் அந்த ஊர் வழியாக பல இடங்களுக்கு கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிக அளவில் கடத்தி செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள 3 பள்ளிகளின் அருகில் கஞ்சா வியாபாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்கள்சிவகாசியில்சிவகாசியில்
சாத்தூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் கஞ்சா புகைக்க பழகி கொடுத்து அந்த மாணவனை மிரட்டி வீட்டில் இருந்து பணம் எடுத்து வர வற்புறுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியின் அருகில் தற்கொலை செய்து கொள்ள முயன்றான். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பெற்றோரின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அதே பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் மாணவனை கஞ்சா புகைக்க வற்புறுத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை போலீசார் அதிகப்படுத்தி கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.