சங்கராபுரத்தில் பாலசுப்பிரமணியர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது


சங்கராபுரத்தில்  பாலசுப்பிரமணியர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் பாலசுப்பிரமணியர், திரவுபதி அமமன் கோவில் கும்பாபிஷேகம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் சன்னதி தெருவில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக செல்வவிநாயகர், மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இக்கோவிலுக்கு அருகே திரவுபதி அம்மன் கோவிலும் புதிதாக கட்டப்பட்டது. இந்த 2 கோவில்களுக்கான கும்பாபிஷேகம் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து லட்சுமி, நவகிரக, சுதர்சன ஹோமம், விக்னேஷ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

இன்று(சனிக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜை, விக்ரஹ பிரதிஷ்டை, விமான கலச ஸ்தாபனம், பன்னிரு திருமுறை பாராயணமும், மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜை, சதுர்வேத பாராயணம், தேவார திருமுறை ஓதுதல், மந்திர ஹோமம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 9 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திரவுபதி அம்மன் கோவில், பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story