பள்ளிக்கூடங்களில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு


பள்ளிக்கூடங்களில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
x

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளிக்கூடங்களில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ. மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் விதம், பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ-மாணவிகளிடம் குறைகள் எதுவும் உள்ளதா? என்று கேட்டறிந்தார். பின்னர் பள்ளியில் கழிப்பறையின் நிலை, பள்ளிக்கு தேவையான கழிப்பறை வசதிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியிலும் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, நேர்முக உதவியாளர் டைட்டன்ஸ், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி அமலா ஆகியோர் உடனிருந்தனர்.

அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர்கள், அம்பை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள், பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அம்பாசமுத்திரம் நகராட்சி 1-வது வார்டு அய்யனார்குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, அம்பை ஒன்றியம் மன்னார்கோவிலில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிரந்தர கட்டிடத்தையும் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரன்மாதேவி மாரி செல்வம், அம்பை நகர செயலாளர் அறிவழகன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன் பாபு, அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story