சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம் போனது.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கி மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.580-க்கும், முல்லை ரூ.260-க்கும், காக்கடா ரூ.225-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story