சத்தியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
சத்தியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினா்கள்.
ஈரோடு
சத்தியமங்கலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் போலீஸ் நிலைய சரகத்துக்கு உள்பட்ட போலீசார் விநாயகர் சிலை செல்லும் ஊர்வல பாதையில் நேற்று மாலை 5 மணி அளவில் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலம் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னரில் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று இறுதியில் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தை அடைந்தது. சத்தியமங்கலம், பங்களாப்புதூர், பவானிசாகர், சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசார், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story