பண்ருட்டியில் பணம் வைத்து சூதாடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது


பண்ருட்டியில்  பணம் வைத்து சூதாடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் பணம் வைத்து சூதாடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது களத்து மேட்டு பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 5 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச்சென்று 5 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் களத்து மேட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் அஜித்(வயது 25), ராஜாங்கம் மகன் சந்திரமோகன்(23), துரைக்கண்ணு மகன் தனசேகர்(27), டைவர்ஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலு மகன் கார்த்திக்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அஜித் உள்பட 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த புள்ளி தாள்கள், 600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


Next Story