பள்ளங்கிணறு கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் திறப்பு


பள்ளங்கிணறு கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் திறப்பு
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பள்ளங்கிணறு கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் செட்டிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளங்கிணறு கிராமத்திலுள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ரூ.27 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களை நேற்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை லதா வரவேற்று பேசினார். சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள் மற்றும் பஞ்சாயத்து தலைவி சிவகாமி சுந்தரி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், யூனியன் பணி மேற்பார்வையாளர் ஜெயசங்கர், செட்டிகுளம் பஞ்சாயத்து செயலாளர் ஜெனிபர் மெர்லின் ரோஸி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி ஆசிரியர் பட்ஷிராஜன் நன்றி கூறினார்.


Next Story