நாகையில், மின்னணு வாகனம் மூலம் நேரடி ஒளிபரப்பு


நாகையில், மின்னணு வாகனம் மூலம் நேரடி ஒளிபரப்பு
x

சட்டமன்றத்தில் மானியகோரிக்கை அறிவிப்புகள்: நாகையில், மின்னணு வாகனம் மூலம் நேரடி ஒளிபரப்பு

நாகப்பட்டினம்


தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத்தொடரில் கடந்த மாதம் 20-ந்தேதியும், மறுநாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து துறை ரீதியாக மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கை அறிவிப்புகள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திட மாவட்ட செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் சட்டமன்ற நிகழ்வினை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக நாகை புதிய பஸ் நிலையத்தில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் பார்வையிடும் வகையில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.


Next Story