மயிலாடுதுறையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்ட கலெ க்டர் அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமை ப்பு சா ர்பில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக கலைந்து சம வேலை க்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற அடிப்படை யில் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரை களை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.