மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறை மூடப்படும் அவலம்


மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறை மூடப்படும் அவலம்
x

மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள மொபைல் கழிவறை தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி மூடப்படுவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.

செங்கல்பட்டு

மொபைல் கழிவறை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் தன்னார்வலர்கள் சிலர் சுற்றுலா வரும் பெண்கள், குழந்தைகளின் சிரமத்தை போக்கும் வகையில் தாமாகவே முன் வந்து மொபைல் கழிவறை வைத்துள்ளனர். ஆனால் இந்த மொபைல் கழிப்பறைக்கு பேரூராட்சியின் தண்ணீர் இணைப்பு வழங்காததால், மினி லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டு வருகிறது.

தற்போது அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு வெண்ணை உருண்டை பாறை வளாகத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதால் அடிக்கடி இந்த மொபைல் கழிவறை பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த நிலையில், மினி லாரி மூலம் நிரப்பபடும் தண்ணீர் விரைவில் தீர்ந்துவிடுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் இந்த மொபைல் கழிவறை மூடப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கழிவறைக்கு செல்ல மாற்று இடத்தை நாடும் நிலைக்கு சுற்றுலா பயணிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே சுற்றுலா பயணிகளின் தேவையை கருதி இங்குள்ள மொபைல் கழிவறைக்கு பேரூராட்சி குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், கூடுதலாக மொபைல் கழிவறைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story