குலசேகரன்பட்டினம் கோவில் வளாகத்தில்முத்தாரம்மன் சப்பர வீதி உலா
குலசேகரன்பட்டினம் கோவில் வளாகத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா நடந்தது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜையும், மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9மணிக்கு ராக்கால பூஜையும் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முத்தாரம்மன் சப்பர வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story