கூடலூர் நகராட்சியில்தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்


கூடலூர் நகராட்சியில்தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 5 வாகனங்கள், 2 வண்ணங்களில் 400 குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையர் காஞ்சனா முன்னிலை வகித்தார். பின்னர் பச்சை நிற குப்பை தொட்டியில் மக்கும் குப்பை, நீல நிற குப்பை தொட்டியில் மக்காத குப்பைகளை பிரித்து நுண் உரம் தயாரிக்கும் மையத்தில் உரமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் வரலட்சுமி, சுகாதார அலுவலர் விவேக், மேலாளர் ஜெயந்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story