கோயம்பேடு சந்தையில், வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்வு..!


கோயம்பேடு சந்தையில், வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்வு..!
x
தினத்தந்தி 6 July 2023 10:16 AM IST (Updated: 6 July 2023 10:19 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு மொத்த சந்தையில் சாம்பார் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளது.

இதன் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, பீன்ஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கோயம்பேடு மொத்த சந்தையில் சாம்பார் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.50 உயர்ந்து ரூ.150 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் பாதிப்பு, மழை மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுவருவது குறிப்பிடத்தக்கது.


Next Story