கோவில்பட்டயில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
கோவில்பட்டயில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி(கிழக்கு):
கோவில்பட்டியில் லாயல் மில் காலனியில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் போலீசார் அந்தகடையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 20 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்காரரான பாண்டியராஜ் மகன் செல்வராஜை (வயது 36) கைது செய்தனர்.
Related Tags :
Next Story