கொம்மடிக்கோட்டை கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை விழா
கொம்மடிக்கோட்டை கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை விழா நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்,:
கொம்மடிக்கோட்டை, ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை தொடக்க விழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ்த் துறை தலைவி ச.கவிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கினார். துணை முதல்வர் மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இலக்கிய சிறப்புகள் என்னும் தலைப்பில் கல்லூரி மாணவிகள் டினோபா, ஸ்டெபினா ஏஞ்சல் ஆகியோர் கவிதைகளை அரங்கேற்றினர். இதில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் அந்தோணி செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பண்பாட்டு பதிவுகள் என்னும் தலைப்பில், தமிழர்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம், விருந்தோம்பல், தமிழின் சிறப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
தமிழ் துறை உதவி பேராசிரியர் பவுன் துரைச்சி நன்றியுரை வழங்கினார்.
Related Tags :
Next Story