காயல்பட்டினத்தில்முஸ்லிம் ஐக்கிய பேரவையினர் ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினத்தில் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வள்ளல் சீதக்காதி திடலில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கண்டித்தும், மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை தலைவர் எம்.கே. முகைதீன் தம்பி என்ற துரை காக்கா தலைமை தாங்கினார்.
மஹ்முது சுல்தான் கிராத் செய்தார். தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. பொருளாளர் காயல் அமானுல்லா தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் அகமது இக் பால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கரும்பன், காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என். ஷாஜகான், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதூல் அஸ்ஹாப் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காயல்பட்டினம் நகரசபை தலைவரும,் நகர தி.மு.க. செயலாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, நகரசபை துணை தலைவர் சுல்தான் லெப்பை, நகர இளைஞரணி செயலாளர் கலிலூர் ரஹ்மான், முஸ்லிம் ஐக்கிய பேரவை முன்னாள் தலைவர் அபுல் ஹசன் கலாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாபு சம்சுதீன் நன்றி கூறினார்