காயல்பட்டினத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காயல்பட்டினத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரண கைதிகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் அல் அமீன் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் வாசு வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில பொதுச் செயலாளர் வனஜா கர்ணன், தூத்துக்குடி, தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குட்டி, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் பாரி வள்ளல், சமூக நலப் பேரவை அமைப்பாளர் தமிழ்ப் பரீதி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினா். மங்கை சாரதி நன்றி கூறினார்.


Next Story