தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல்: சாலை மறியல்:


தேனியில்   மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் சாலை மறியல்:  சாலை மறியல்:
x

தேனியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 144 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

காங்கிரசார் போராட்டம்

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் செய்வதற்காக அக்கட்சியினர் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு இன்று காலையில் திரண்டனர்.

மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் அங்கிருந்து பழைய பள்ளிவாசல் தெரு வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் பழைய பஸ் நிலையம் வழியாக நேரு சிலை சிக்னலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதில், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், வர்த்தகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

144 பேர் கைது

நேரு சிலை சிக்னல் பகுதியில் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் செய்தனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியலால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 144 பேரை கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story