கோபியில்எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோபியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
ஈரோடு
கடத்தூர்,
இஸ்ரேலின் அடக்குமுறையையும், ஆக்கிரமிப்பையும் ஐ.நா. தடுக்கவேண்டும். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலக நாடுகள் தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி பஸ்நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி லுக் மானுல்ஹக்கீம் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபி போலீசார் கைது செய்ய முயன்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் திடீரென ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story