கயத்தாறு பேரூராட்சியில் ரூ.21 லட்சத்தில் கட்டப்பட்டபுதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா
கயத்தாறு பேரூராட்சியில் ரூ.21 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா நகர்பறம் 2.0 திட்டத்தின் மூலம், 2022-23 பேரூராட்சி திடக்கழிவு பூங்காவில் உள்ள வளமையத்தில் ரூ.7¼ லட்சத்திலும், ரூ.13 லட்சத்தில் புதிய உரம் தயாரிக்கும் கூடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் சபுரா சலீமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story