தேவதானப்பட்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதி


தேவதானப்பட்டியில்  புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதி
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

தேனி

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேவதானப்பட்டி பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தடங்கலற்ற மின்சாரம் வினியோகம் வழங்கும் வகையில், புதிதாக ஒரு துணை மின்நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, இந்த புதிய துணை மின் நிலையம் அமைக்க தேவையான இடத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வழங்க பொதுமக்கள் முன்வரலாம். அரசின் வழிகாட்டுதல் விலைக்கு நிலத்தை கொடுக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story