கூடலூர் பகுதியில் நிலக்கடலை விளைச்சல் அமோகம்


கூடலூர் பகுதியில்  நிலக்கடலை விளைச்சல் அமோகம்
x

கூடலூர் பகுதியில் நிலக்கடலை அமோக விளைச்சல் அடைந்துள்ளது

தேனி

கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய கழுதைமேடு புலம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் பெய்து வந்த தொடர் மழையால் நிலக்கடலை நன்கு விளைச்சல் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள நிலங்களில் மான், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதையடுத்து விவசாயிகள் தங்களது நிலங்களில் இரவு, பகல் பாராமல் காத்திருந்து சத்தம் போட்டு வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலக்கடலை குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலக்கடலைக்கு கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story