கூடலூர் பகுதியில் முட்டைகோஸ் அமோக விளைச்சல்
கூடலூர் பகுதியில் முட்டைகோஸ் அமோக விளைச்சல் அடைந்துள்ளது
தேனி
கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளான கழுதைமேடு, பெருமாள் கோவில் புலம், காக்கான் ஓடை, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் முட்டைக்கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பயிரிடப்பட்ட நாளில் இருந்து 90 முதல் 100 நாட்களில் முட்டைக்கோஸ் மகசூல் தரும். தற்போது இந்த பகுதிகளில் முட்டைகோஸ் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் அதனை விவசாயிகள் அறுவடை செய்து லாரிகள் மூலம் மதுரையில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். முட்டைகோஸ் கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.35 வரை விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story