முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
துண்டம் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துண்டம் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முடிக்கொண்டான் ஆறு
திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் முதல் கொத்தமங்கலம் ஊராட்சி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிக்கொண்டான் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் கட்டுமாவடி ஊராட்சி ஆற்றங்கரை தெரு முதல் துண்டம் நீர் தேக்கம் வரை ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. நெற்பயிர்கள் பாதிப்பு மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
அகற்ற வேண்டும்
ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.