சித்தோட்டில் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்


சித்தோட்டில் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
x

சித்தோட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

பவானி

சித்தோட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மூட்டைகளில் புகையிலை

ஈரோடு அடுத்துள்ள சித்தோடு சமத்துவபுரத்தில் ஒரு வீட்டில் இருந்து புகையிலை நாற்றம் வருவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் அந்த வீட்டை நோட்டமிட்டனர். அப்போது வீட்டு வாசலில் ஒரு கார் நின்றது. வீடும் பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து வீட்டுக்குள் இருந்து புகையிலை, குட்கா நாற்றம் வந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சின்ன, சின்ன சாக்குமூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் அங்கிருந்து சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களையும், வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (வயது 35) என்பவர் ஜவுளி வியாபாரம் செய்வதாகவும், துணிகளை வைக்க குடோனாக அந்த வீட்டை பயன்படுத்துவதாகவும் வீட்டு உரிமையாளரிடம் கூறி வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, கார் மூலம் அவர் தேவைப்படும் இடங்களுக்கு கடத்தி சென்றதும், போலீசார் வருவதை எப்படியோ தெரிந்துகொண்டு தப்பி ஓடியதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலராமை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story