அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை


அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
x

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும், பீடா வெற்றிலை 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையும் ஏலம் போனது. செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்றது. மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வெற்றிலை விற்பனையானது.


Related Tags :
Next Story