"நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
x

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதே நமது குறிக்கோள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

திருநெல்வேலி

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதே நமது குறிக்கோள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

செயற்குழு கூட்டம்

நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. அவைத்தலைவர்கள் கிரகாம்பெல், முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகரச்செயலாளர் சுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார்.

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.

40 தொகுதிகளில்

அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. உயிர் துடிப்புடன் உள்ளது என்றால் அதற்கு தொண்டர்கள் உயிரோட்டமாக இருப்பது தான் காரணம். உலகத்தரத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைய வேண்டும் என்பதற்காக நான் முதலமைச்சரிடம் சொல்லி தொல்லியல் துறையை பெற்றுள்ளேன்.

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் இதுதான் நமது குறிக்கோள். 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றாலும் நெல்லை தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகவர்கள் கலந்துரையாடல்

கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் தென் மண்டல மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். வருகிற 7-ந்தேதி கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நலத்திட்டங்கள் வழங்குவது, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசார கூட்டங்கள் பிரமாண்டமாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாநில சட்ட தீர்மானக் குழு உறுப்பினர் சுப.சீதாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் பிரபாகரன், கே.கே.சி. பிரபாகர பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், மூளிகுளம் பிரபு, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளா் போர்வெல் கணேசன், யூனியன் தலைவர்கள் தங்கபாண்டியன், சேவியர் ராஜா, இளைஞரணி நிர்வாகிகள் ஜான் ரவீந்தர், வில்சன் மணித்துரை, அருள்ராஜ் டார்வின், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், நிர்வாகிகள் ஆறுமுகராஜா, வீரபாண்டியன், செல்வசூடாமணி, வேலன்குளம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை

நெல்லை மத்திய மாவட்டம் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் தி.மு.க.வில் புதிய பெண் உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர்கள் டி.பி.எம்.மைதீன்கான், இரா.ஆவுடையப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story