ராமநாதபுரம், மதுரை உள்பட 6 மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்- 27-ந்தேதி நடக்கிறது
ராமநாதபுரம், மதுரை உள்பட 6 மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்- 27-ந்தேதி நடக்கிறது
மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மதுரை அதன் மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் நிதி உங்கள் அருகில் குறைத்தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம். அதன்படி முகாம்கள் மதுரை மாவட்டத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலும், தேனி மாவட்டத்தில் சின்னமனூர் நகராட்சி கூட்ட அரங்கத்திலும், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பேயன்பட்டியில் உள்ள செல்லப்பன் வித்யா மந்திரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, ஆத்துப்பட்டி பிரிவில் உள்ள ஜெயின் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்சிலும் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.