தமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்த வெயில்


தமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்த வெயில்
x

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள்;

* கரூர் பரமத்தி - 106.7 டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு - 105.44டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி - 107.78 டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் - 104.9 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் - 107.66 டிகிரி பாரன்ஹீட்

* திருத்தணி - 104.18

* பாளையங்கோட்டை - 106.7 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் - 106.16 டிகிரி பாரன்ஹீட்

* சேலம் - 100.94 டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சாவூர் - 104 டிகிரி பாரன்ஹீட்

* மீனம்பாக்கம் - 101.48 டிகிரி பாரன்ஹீட்

* கோவை - 100.4 டிகிரி பாரன்ஹீட்


Next Story