தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை


தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் தொல்லை

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38) கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3.1.2021 அன்று 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாகும் வரை சிறை

இந்த வழக்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முருகனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story