பணிதள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாகனம் சிறைபிடிப்பு

பணிதள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாகனம் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வாகனத்தை ஊரக வேலை திட்ட பணியார்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வாகனத்தை ஊரக வேலை திட்ட பணியார்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி அருகே தெள்ளார் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கணக்கு வழக்குகளை தெள்ளார் ஊராட்சி பணிதளப் பொறுப்பாளர் வழங்காமல் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் வந்தனர்.

ஆனால் மனுவை பெறாமல் வேலை நிமித்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் தனது வாகனத்தில் ஏறி செல்ல முயன்றார். இதனால் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர் வாகனத்தை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் கமலாட்சிஇளங்கோவன் மற்றும் ஊராட்சி தலைவர் ஆனந்தன் ஆகியோர் பொதுமக்களை சமாதானம் செய்து ஊராட்சி பணிதள பொறுப்பாளர் பெருமாள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story