மக்கள் குறை தீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை


மக்கள் குறை தீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு முகாமில் 59 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் முன்னிலை வகித்தார். இதில் ஏற்கனவே பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுக்களில் போலீஸ் நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 63 மனுக்களில் 59 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள 4 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த முகாமில் புதிதாக 38 பேர் புகார் மனு கொடுத்தனர். இந்த மனு மீது விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்ட அவர் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், மகேஷ், லஷ்மணகுமார், குகன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story