செருப்பு, உள்ளாடைகளில் காந்தி, கடவுள் படங்கள்: ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு


செருப்பு, உள்ளாடைகளில் காந்தி, கடவுள் படங்கள்: ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
x

செருப்பு, உள்ளாடைகளில் காந்தி, கடவுள் படங்கள்: ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்.

சென்னை,

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்துள்ள மனுவில், "அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செருப்பு மற்றும் உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் கடவுள் படங்களை அச்சிட்டு விற்பனை செய்கின்றன. இது தேசப்பிதா மகாத்மா காந்தியை மட்டுமின்றி கடவுள் மீது நன்மதிப்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள பொதுமக்களையும் அவமதிக்கும் செயல் ஆகும். சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது. மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருமைப்பாட்டுடனும், மத நல்லிணக்கத்துடனும் வாழும் இந்திய மக்கள் மத்தியில் மத விரோதத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் வகையில் செயல்படும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story